BIGGBOSS6 TAMIL : "நீங்க ஒண்ணும் பிக்பாஸ் கெடையாது".. 'டீ' பேர்ல வெடிச்ச சண்டை!!.. ரணகளம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "காதல்'னு வந்துட்டா மனசு மட்டுமில்ல".. ராம் இயக்கத்தில் நிவின்.. வெளியானது Title Announcement வீடியோ!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் காஃபி அல்லது டீ போடுவது தொடர்பாக போட்டியாளர்கள் மத்தியில் விவாதம் தொடங்கி உள்ளது.

மொத்தமுள்ள 20 போட்டியாளர்களும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு சமையல், பாத்திரம் கழுவுதல், வீடு சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், சமையல் அணியில் உள்ள மகேஸ்வரி, ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் டீ கொடுக்க முடியும் என கூறுகிறார்.

ஆனால், இதற்கு எதிர் கருத்து சொல்லும் சக போட்டியாளர் அசீம் நீங்கள் இப்படி உத்தரவு போடக் கூடாது என்றும், நீங்கள் ஒன்றும் பிக்பாஸ் கிடையாது என்றும் ஆவேசமாக கத்தவும் செய்கிறார். பதிலுக்கு மகேஸ்வரியும், Portray செய்யும் வேலை ஒன்றும் இங்கே வேண்டாம் என்றும் கூறுகிறார். இதன் பின்னர், அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்க, டீ கொடுப்பது பற்றி ஷிவினும் பேசுகிறார். அப்போது அவருக்கும் மகேஸ்வரிக்கும் விவாதம் உருவாக இது தொடர்பான ப்ரோமோ காட்சிகள் தற்போது பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "ஒரு காலத்துல பெரிய ஹீரோயின்".. தெருக்களில் யாசகம் செய்யும் 'சக்திமான்' நடிகை!!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 housemates starts to fight in the name of tea

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Biggboss 6 housemates will find this news story useful.