தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில், ஜிபி முத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.
ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராப் சிங்கர் ஆர்யன் தினேஷ் (ADK), பிரபல தொகுப்பாளினி ஜனனி, நடிகை ஆயிஷா, நடிகை ரச்சிதா உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது முதலே தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆர்மி வரை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்து நடனமாடும் வீடியோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே உள்ள புல்வெளியில் மழை பெய்து கொண்டிருக்க மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நினையாத படி ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், ஜிபி முத்துவோ மழையில் நனைந்த படி வழக்கமான தனது வேடிக்கையான நடன ஸ்டெப்களை போட்டு மற்ற போட்டியாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்த வீடியோக்களை காணும் நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வீடியோவை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.