BIGGBOSS 4 : ஒரு போட்டியாளரை பார்த்துக்க.., இப்படி ஒரு போட்டியா..?!! - செம என்டர்டெயின்மென்ட் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் புதிய டாஸ்காக 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த டாஸ்கில் பாட்டியாக வரும் அர்ச்சனாவை திருப்தி செய்பவர்களுக்கு சொத்து பத்திரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன்., சொத்து பத்திரத்தை திருடவும் ஒரு கும்பல் இருப்பதாகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் கொண்ட, இந்த போட்டியின் புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

BIGGBOSS 4 : ஒரு போட்டியாளரை பார்த்துக்க.., இப்படி ஒரு போட்டியா..?!! - செம என்டர்டெயின்மென்ட் இருக்கு வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss 4 tamil new promo ft paati sollai thattathe task

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.