பிக்பாஸ் பிரபலம், தனது வீட்டில் நடக்கவுள்ள ஒரு நல்ல செய்தியை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர், தனது வீட்டில் நடக்கவுள்ள நல்ல விஷயத்தை பற்றி நேற்றைய போட்டியில் பகிர்ந்து கொண்டார். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி, நேற்று தனது வாழ்க்கையில் சந்தித்த வெற்றி தோல்விகள் குறித்து எமோஷனலாக பேசினார். அப்போது அவர், தனது மருமகள் இப்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் மார்ச் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கவிருப்பதாகவும் அவர் சந்தோஷமாக கூறினார்.