விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனி இப்படி இது தொடர வேண்டாம் என நினைப்பதாக கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி சனம் மற்றும் ரேகாவுக்கு Heart Break கொடுப்பதோடு, செம அதிரடியும் காட்டுகிறார்.