உங்கள முதல் தடவ 'முழுசா' பாத்த 'லக்கி GUY' யாரு?.. ரசிகர் கேட்ட கேள்வி.. கூலா பதில் சொன்ன BIGG BOSS பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விபத்துக்கு பிறகு, தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என ஒட்டுமொத்தமாக ஆக்டிவ் மோடில் இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் வாயிலாக தன்னுடைய ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

Advertising
>
Advertising

ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதனைத் தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்

கடந்த 2018 ஆம் ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், யாஷிகா ஆனந்த் போட்டியாளராக களமிறங்கிய நிலையில், இன்னும் மக்கள் மத்தியில் அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

விபத்தில் சிக்கிய யாஷிகா

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். இந்த விபத்தில், அவரது நெருங்கிய தோழி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த யாஷிகா, சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ரசிகர்கள் கேள்விகள்

தற்போது அவர் குணமடைந்துள்ள நிலையில், மீண்டும் சினிமா, சமூக வலைத்தளம் என அனைத்திலும் ஆக்டிவாக யாஷிகா ஆனந்த் வலம் வருகிறார். இந்நிலையில், ரசிகர்கள் தன்னிடம் இன்ஸ்டாக்ராமில் கேட்ட கேள்விகளுக்கு யாஷிகா பதிலளித்து வந்தார். அதில் பலரும் யாஷிகாவின் தோழி மறைவு குறித்து பல உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு, யாஷிகாவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.

யாஷிகாவின் கூல் பதில்

அதே போல, ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும் யாஷிகா பதிலளித்து இருந்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், "உங்களை முதல் முதலில் நிர்வாணமாக பார்த்த 'Lucky Guy' யார்?" என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதனை கூலாக எடுத்துக் கொண்ட யாஷிகா, "டாக்டர் என்று நினைக்கிறேன்" என பதிலளித்துள்ளார். இதற்கு முன்பாகவே, ரசிகர்கள் தன்னைக் குறித்து தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, வெளிப்படையாக பதில் சொல்லி, யாஷிகா அதிகம் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Yashika Cool reply for fans controversial questions

People looking for online information on Bigg boss, Bigg Boss Season 2, Cool Reply, Fans Question, Instagram, Instagram QA, Yashika Aannand will find this news story useful.