"வருத்தப்படாதீங்க".. திடீரென கணவரை பிரிந்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.

Advertising
>
Advertising

இவர்கள் பலரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலங்களாக இருக்கின்றனர். இவர்களுள் முக்கியமானவர் பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இவர் பங்கு பெற்றிருந்தார்.

இந்நிலையில்தான் இவர் தம்முடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாய் அறிவித்திருக்கக்கூடிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக, அவர் பதிவிட்டு இருக்கும் சமூக வலைதள பதிவில், “ஆறுக்கும் மேலான வருடங்களாக ஒன்றாக இருந்த நானும் அஞ்சனும் பிரிந்து வாழ்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம். இன்னும் நான் அவரை நேசிக்கவே செய்கிறேன். எனினும் நாங்கள் இருவரும் உறவு என்கிற அழுத்தம் இல்லாமல் நாங்களாக இருக்கவே விரும்புகிறோம், அதனால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு பிரிவதாகவும் அந்த முடிவுதான் சிறந்தது என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம்.

பொதுவாக எங்களிடம் நிறைய குறைகள் இருந்தாலும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை கண்டுபிடிப்பதற்கு எங்களுக்கு இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. என்ன நடந்தது என்று யூகிக்கும் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது.. எங்களுக்குள் எதுவும் மோசமாக நடந்துவிடவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவருடைய பதிவில், “தயவு செய்து எங்களுக்காக நீங்கள் வருந்தாதீர்கள்.. ஏனென்றால் நாங்கள் பிரிந்ததற்கு நாங்கள் வருந்தவில்லை. அஞ்சனும் நானும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்கிற முடிவை யோசித்து எடுத்து இருக்கிறோம். இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருக்கிறது. நண்பர்களாக இருப்பது என்பது எல்லாவற்றிலும் சிறந்தது!” என்று பதிவிட்டு இருக்கிறார்.

தன்னுடைய கணவரை பிரிந்ததற்கு வைஷ்ணவி கொடுத்துள்ள விளக்கம் மற்றும் பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் வைஷ்ணவியின் இந்த திடீர் பிரிவு அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தினாலும், மேலும் பல ரசிகர்கள் மெச்சூரிட்டியுடன் அவர் கொடுத்த விளக்கத்தை பற்றி பேசி வருகின்றனர். அவருக்கு பாசிடிவ் வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss vaishnavi announces seperation பிக்பாஸ் வைஷ்ணவி

People looking for online information on Bigg Boss 5, Bigg Boss 5 Tamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg boss vaishnavi, Bigg boss vaishnavi announces seperation will find this news story useful.