Chennai, BiggBossUltimate, 2022, Jan 31:- விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இப்போது பிக்பாஸ் தமிழ் ஓடிடி நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியையும், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே முந்தைய டெலிவிஷன் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் கட்டே இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்துக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பிக்பாஸ் ஓடிடி பல சீசன்களாக போய்க்கொண்டிருக்கின்றன. இந்த ஓடிடி நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாவது போல் கிடையாது. டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி வீட்டில் இருக்கும் அனைவரும் பார்க்கிறார்கள், சிறார்கள் இருப்பார்கள் உள்ளிட்ட வயது வரம்புகளால், சென்சார் கட்டுக்கு உள்ளாகி காட்டப்படும்.
சிகரெட் பிடித்த சிலர்
ஆனால் ஓடிடி நிகழ்ச்சி என்பது ஓடிடி பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாவதால், இந்த நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் நடக்கும் விஷயங்கள் கட் பண்ணாமல் காட்டப்படும். இந்த நிகழ்ச்சியின் ஒரு மணி நேர சுருக்கமான தொகுப்பினையும் தினமும் இரவு ஹாட் ஸ்டாரில் 9 மணிக்கு வெளியாகும் வெர்ஷனில் அன்றன்றய எபிசோடுகளாக பார்க்க முடியும். இதில் தான் போட்டியாளர்கள் நிரூப், அபினய், அபிராமி உள்ளிட்ட சிலர் சிகரெட் பிடிப்பதை கட் பண்ணாமல் காட்டியுள்ளார்கள். இதில் அபிராமி சிகரெட் பிடித்தது குறித்து பலரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுப்பி வருகின்றனர்.
பெண் என்பதால் விமர்சிப்பதை ஏற்கமுடியாது..
இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசப்படும் இந்த கருத்துக்கு இணையவாசிகள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆம், அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் ஆண்கள், பெண்கள் இருபாலருமே சிகரெட் பிடிக்கும்போது, ஆண்களை எதுவும் சொல்லாமல் பெண் சிகரெட் பிடிப்பதை மட்டும், அவள் பெண் என்கிற ஒரே காரணத்தால் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது தவறு என்றும், அதை பெரிது படுத்தி பேசுவதும் ஆணாதிக்க சிந்தானாவாதம் என்றும், அதை ஏற்க முடியாது என்றும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
விழிப்புணர்வை தான் ஏற்படுத்த முடியும்
இத்தனைக்கும் அனைவரும் சிகரெட் பிடிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் நின்று, சிகரெட் பிடிக்கின்றனர். அத்துடன் மது, புகைப்பிடிப்பது உள்ளிட்டவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். என்றாலும் அதுபற்றிய விழிப்புணர்வை தான் ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்த முடியும் அல்லது ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து, “ஒருவர் எப்படி புகைப்பிடிக்கலாம்?” என்றெல்லாம் யாரும் ஒருவரை விமர்சிக்க முடியாது.
ஒருவரது தனிப்பட்ட உரிமை..
அதற்கு யார் ஒருவருக்கும் உரிமை கிடையாது. ஒருவேளை அது தடை செய்யப்பட்ட இடத்தில் நின்று ஒருவர் செய்யும்போதோ, அல்லது இன்னொருவரை பாதிக்கும்போதோ, அவர்களை கேள்விக்குள்ளாக்க முடியும். ஆனால், தனக்காக ஜோனில் ஒருவர் புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அந்த பெர்சனல் விஷயத்தில் யாரும் கருத்து சொல்லவோ விமர்சிக்கவோ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.