ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read | எலிமினேஷனுக்கு பிறகு வைரல் ஆகும் மணிகண்டா ராஜேஷின் முதல் போஸ்ட்.! bigg boss 6 tamil
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள். ஆனால் இந்த முறை தங்கள் ஆடியது குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை பேச வைத்து அதில் ஒருவரை நாமினேஷன் ப்ரீ Zone என குறிப்பிட்டிருந்தது. இதில், அசிம் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில், அதிக Tiles கொண்டு தடம் பதிக்கும் நபர், நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.
அதே போல இந்த டாஸ்க்கின் ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்கள் கடினமாக செயல்பட்டு வருவதால் கொஞ்சம் கூட விறுவிறுப்பும் குறையாமல் இருந்து வருகிறது. அதே வேளையில், சற்று கடினமாகவும் சுற்றுகள் இருப்பதால் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஷிவினை பார்த்து பிக் பாஸ் சொன்ன வார்த்தை ஒன்று தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. Ticket To Finale டாஸ்க்கிற்கு இடையே பந்தை நேராக கூடை ஒன்றிற்குள் உருட்ட வேண்டும் என்ற கேமும் உள்ளது. இதில், போட்டியாளர் ஷிவின் சிறப்பாக பந்தை உருட்டியதாகவும் தெரிகிறது. அப்படி அவர் உருட்டி முடித்து வந்ததும் பேசும் பிக் பாஸ், "ஷிவின், நைஸ் உருட்டல்" என குறிப்பிடுகிறார். இதனைக் கேட்டதும், "தாத்தா (பிக் பாஸ்) கவனிச்சுக்குறேன்" என தெரிவிக்கிறார் ஷிவின். மற்ற சில போட்டியாளர்கள் கூட சிரிக்கவும் செய்கின்றனர்.
உருட்டுவது என்றால், ஏதாவது ஒரு பொய்யை நிஜமாக சொல்ல முற்படுவது என்பது தான். அது நமக்கு தெரியும் போது "இப்டி உருட்டாதே" என கூறுவோம். மீம்ஸ் மத்தியில் அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் உருட்டு என்ற வார்த்தையை பிக் பாஸ் பேசியுள்ள விஷயம், பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
Also Read | வசமா போட்டுக் கொடுத்த மைனா.. அடுத்த நிமிஷமே அசிம் சொன்ன வார்த்தை!!.. செம Fun-ப்பா 😅