தொடங்கியது ! நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் PROMO VIDEO இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய டிவிக்களில் தமிழ், தெலுங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமானது. இரண்டு சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்து தமிழில் மூன்றாவது சீசன் கடந்த மாதம் ஜுன் 23ம் தேதி ஆரம்பமாகி ஒரு மாதத்தைத் தொட உள்ளது.

தமிழில் தொடர்ந்து மூன்று சீசன்களாக கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஆனால், தெலுங்கில் சீசனுக்கு ஒருவராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல் சீசனில் ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனில் நானி, மூன்றாவது சீசனில் நாகார்ஜுனா என மாறிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோரை விட சீனியர் நடிகரான நாகார்ஜுனா இந்த மூன்றாவது சீசனை தொகுத்து வழங்குவதற்கு தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே அவர் டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி உள்ளார்.

இன்று ஆரம்பமாக உள்ள தெலுங்கு சீசன் 3யில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் என ஒரு பட்டியல் பரவி வருகிறது. அதில் அதிக பிரபலமானவர்கள் என யாருமேயில்லை.

முழு விவரம் இன்று இரவு 9 மணிக்கு நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Telugu Season 3 Nagarjuna From Today

People looking for online information on Akkineni Nagarjuna, Bigg Boss 3, Telugu will find this news story useful.