கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி,ரமேஷ், ரம்யா மூவரும் விளையாடினர். இதை மற்ற போட்டியாளர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். கடைசியில் ரமேஷ் வெற்றி பெற்று கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது. ரம்யா இந்த முடிவை இயல்பாக ஏற்றுக்கொள்ள, பாலாஜியால் முடியவில்லை.
தான் அந்த நாலு பந்துகளையும் தட்டி விடவில்லை. என விளக்கம் சொன்ன அனைவரிடமும் அடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆரி ஒதுங்கிவிட, ரியோவின் விளக்கத்தை பாலாஜி ஏற்கவே இல்லை. கடைசியில் ரியோ எப்படி பார்த்தாலும் ரமேஷ் தான் லீடிங்கில் இருக்கிறார். அதனால் நீங்கள் வெற்றி பெற முடியாது என பாலாஜியிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்தே அவர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்.
இந்த வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் போது பிக்பாஸ் திடீரென குறும்படம் போட்டு காட்டினார். இதனால் ரசிகர்களுக்கு பாலாஜி தான் தட்டி விட்டார் என்பது தெரிய வந்தது. ஆனால் உள்ளே குறும்படம் போடப்படவில்லை. ஒருவேளை இது பிக்பாஸின் ஸ்ட்ரேட்டஜியா? என்பது தெரியவில்லை. பிக்பாஸ் போட்டுக்காட்டிய அந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது.