ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடந்தது. இதில் இருவகை அணிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் பேக்கரி கடைகளை வைத்தனர்.
ஒரு குழுவுக்கு தனலெட்சுமி ஓனராகவும், மற்றொரு அணிக்கு விக்ரமன் ஓனராகவும் செயல்பட்டனர்.
இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்தனர். அப்போது, தனலட்சுமி - மணிகண்டன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, இறுதியில் அந்த பொருட்கள் மணிகண்டன் கையில் வந்துவிடுகின்றன.
இதில், தனலட்சுமி மிகவும் ஆவேசமாக தன்னை தள்ளிவிட்டு தன் கையிலிருந்து பிடுங்கி மணிகண்டன் பொருட்கள் எடுத்துக் கொண்டதாக கூறுகிறார். இந்த பேச்சில் தனலட்சுமி மரியாதைக் குறைவாகப் பேசுவதாய் சொன்ன மணிகண்டன், “உன் வயது என்ன? என்னை எப்படி ‘டா’ என்று சொல்கிறாய்?” என்று இன்னும் கொதிக்கிறார். அதன்பிறகும் இவர்களுடைய சண்டை பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்கிறது. மேலும் தனலட்சுமி சொல்வது போல், அவரை தள்ளிவிட்டு அவர் கையிலிருந்து பிடுங்கி பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆவேசமாக மணிகண்டன் பதில் சொல்ல, இதை யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று தனலட்சுமி சாட்சிக்கு மற்ற ஹவுஸ் மேட்ஸை கேட்கிறார். இவர்களின் வாக்குவாதம் இப்படி இந்த வீட்டில் தொடர்கிறது. இறுதியில் நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்க என்று ஆவேசமாக தனலட்சுமி கூறினார்.
சண்டைக்கு பின்னர் பல மணித்துளிகளுக்கு பின்னர் தனலெட்சுமி அழும் போது, "முதலாளி அழக்கூடாது முதலாளி" என மைனா ஜாலியாக தனலெட்சுமியை கலாய்க்கிறார். மேலும் "என் வீட்டுக் கன்னுக்குட்டி" பாடலையும் மைனா பாடுகிறார். இச்சூழலில் மணிகண்டன் எழுந்து தனலெட்சுமி நோக்கி நடந்து சென்று தனலெட்சுமியை 'சிஸ்டர்' என கூறி சமாதானம் செய்கிறார். இதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் கமல் பேசும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், "உங்களுடைய விழிப்புணர்வுக்காக ஒரு குறும்படம். இப்போ எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருந்தீங்கள்ல.. அது மாதிரி சிரிச்சுகிட்டு போனிங்கன்னா நான் நல்லவனா இருக்க மாட்டேன். பிக்பாஸ் ஒரு ரூல்ஸ் வச்சாரு. அந்த ரூல்ஸ் படி நீங்க (தனலெட்சுமி) விளையாடல.. இந்த வெற்றி உங்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. நாமினேஷனில் இருந்து நீங்கள் ஃப்ரீ என்ற அந்த உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகிறது. தனலெட்சுமி கண் கலங்கினால் ஆறுதல் சொல்றதும் நான் தான்." என கமல்ஹாசன் பேசும் இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்களையும் வரவேற்பையும் ஒரு சேர பெற்று வருகிறது.
பேக்கரி டாஸ்க்கில் தனலெட்சுமி அணி வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வெற்றி விக்ரமன் அணிக்கு கமல்ஹாசனால் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.