தாலி இல்ல தங்கம் இல்ல.. சிம்பிளா நடந்த பிக் பாஸ் பிரபலத்தின் காதல் திருமணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான ஆர்ஜே வைஷ்ணவி தனது நீண்ட நாள் காதலரை மணமுடித்துள்ளார்.

எழுத்தாளர் சாவியின் பேத்தியான வைஷ்ணவியும், அஞ்சன் ரவி எனும் விமானியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆடம்பரம் இல்லாமல், நகை வாங்காமல், தாலி இல்லாமல், மோதிமரம் மாற்றாமல், வெறும் 10 நிமிடங்களில் மாலை மாற்றிக் கொண்டு தனது காதலரை வைஷ்ணவி கரம்பிடித்துள்ளார்.

பெசண்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி கோவிலில் திருமணமும், ரிசார்ட் ஒன்றில் காக்டெய்ல் பார்ட்டியும் என மிகவும் எளிமையாக வைஷ்ணவியின் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கான செலவில் விலங்குகள் நலனிற்காக பயன்படுத்தப்போவதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

மேலும், காதலை நிரூபிக்க ஆடம்பரம் தேவையில்லை என வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்ததுடன், தங்களது திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil contestant Vaishnavi marries her boyfriend Anjan

People looking for online information on Anjan, Bigg Boss Tamil, Vaishnavi will find this news story useful.