பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். தனது யதார்த்தமான செயல்பாடுகளால் ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், இறுதிப்போட்டி வரைவந்து நல்ல கடுமையான போட்டியாளராக விளங்கினார்.
பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 'காதலிக்க யாருமில்லை', விஷ்ணு விஷாலுடன் 'எஃப்ஐஆர்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரைசா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ''உண்மையாக சொல்லணும்னா, கொரோனா வைரஸ் அந்த லேபில் கண்டுபிடிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டால் நான் அங்கே சென்று......'' என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் ''என்னுடன் யார் வருகிறீர்கள்?'' என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.