நேற்று பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி-அனிதா சம்பத் இடையிலான மோதல் ஸ்டார்ட் ஆனது. கடைசியில் நான் வேற டீமுக்கு போறேன் என கேப்டன் ரம்யா பாண்டியனிடம் பஞ்சாயத்து பேசினார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அவர் வேறு டீமுக்கு செல்லக்கூடாது என ரேகாவும், சனமும் கேட்டுக்கொண்டனர்.
கிச்சனில் அனிதா, சோம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு ஒரு உரசல் நிகழ்ந்தது. (கிச்சன் வாஸ்து சரியில்லை) கமெண்ட் சொல்கிறேன் பேர்வழி என சோம் அனிதா-வனிதா என சொல்லிவிட்டார் அவ்வளவு தான் அனிதா மறுபடி பொங்கியெழ ஆரம்பித்து விட்டார். கடைசியில் ஏகப்பட்ட சாரிகளை சொல்லி சோம் அவரை சமாதானம் செய்தார்.
ஆனாலும் அனிதா சமாதானம் ஆகவில்லை என அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. மீண்டும், மீண்டும் அதுகுறித்தே பேசினார். இதைப்பார்த்த ரியோ, '' சோம் ஒருதடவ தான் சொன்னான். நீ திரும்ப, திரும்ப அதப்பத்தி சொல்லி உன் பேர கெடுத்துக்காத,'' என அனிதாவுக்கு அட்வைஸ் செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட அறிவுரை என ரியோவை பாராட்டி வருகின்றனர்.