விஜய் டிவியில் ஒளிபரப்பகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (அக்.6) பிக் பாஸ் சீசன் 3-ன் கிராண்ட் ஃபினாலே நடைபெறுகிறது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது இறுதிப்போட்டிக்கு முகென், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் தயாராக உள்ளனர். 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது நாளை தெரியவரும்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோவில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன், ‘பிக் பாஸ் போட்டியில் யார் வெற்றியாளர் என்பதை அறிந்துக் கொள்ளும் உற்சாகம் எல்லோர் மனதிலும், அய்யயோ 105 நாட்கள் முடிந்துவிட்டால் 200 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை மறுபக்கம்.. இப்போதைக்கு கவலை வேண்டாம்.. உற்சாகமாக கொண்டாடுவோம் குறிப்பாக இன்று’ என தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் சாண்டி, முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்களுக்குமே செல்வாக்கு இருப்பதால் பிக் பாஸ் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.