விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து 4வது போட்டியாளராக வெளியேறிய மீரா மிதுன், பிக் பாஸ் அனுபவம் குறித்தும், வைரலாகும் தனது முன்னாள் கணவரின் புகைப்படம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா ஆகியோரை தொடர்ந்து நான்காவதாக மீரா மிதுன் வெளியேறினார். சேரன் மீது குற்றம் சாட்டியது காரணமாக மக்களின் வெறுப்பை சம்பாத்தித்த மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின் அவர், Behindwoods-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார், பிக் பாஸ் வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டது குறித்தும், ஹவுஸ்மேட்ஸ் அவர் மீது சுமத்திய குற்றாச்சாட்டுகள் குறித்தும் பேசினார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் மீரா மிதுனின் கணவரின் புகைப்படம் மற்றும் அவரது திருமணம் குறித்து கேட்டபோது, ‘அது அப்பா அம்மா பார்த்து வைத்த ஒரு சோசியல் மேரேஜ். ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. அந்த திருமணம் பதிவு கூட செய்யப்படவில்லை. தற்போது பப்ளிசிட்டிக்காக அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து வருகிறார்’ என்று மீரா தெரிவித்தார்.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் மணப்பெண் அலங்காரம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சிரித்தபடி விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
.
மீரா மிதுனின் ஃபேன்ஸ் அவர் உண்மையில் சொல்கிறாரா அல்லது விளம்பரத்தில் நடிப்பதற்கான கெட்டப்பா என்று புரியாத குழப்பத்தில் உள்ளனர்.