விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 51வது நாள் எபிசோடில், முகெனுக்கு எதிராக அபிராமியை தூண்டிவிட்ட வனிதா சிறப்பு விருந்தினர் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பிருந்தும், காதல், நட்பு, முக்கோண காதல் என்றே ஹவுஸ்மேட்ஸ் அடித்த கலாட்டா பார்வையாளர்களை போர் அடிக்கச் செய்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்சனைகள் வந்துக் கொண்டிருந்த அபிராமி-முகென் ஜோடியை பிரிக்கும் மிஷனை வனிதா சிறப்பாக செய்து முடித்தார்.
முகென் அபிராமியின் காதலை, அழுகையை பயன்படுத்திக் கொள்வதாகவும், அபிராமியின் காதல் தனது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆமோதிக்கிறார் என்பதை அபிராமியிடம் கூறி வனிதா அவரை கொம்பு சீவிவிட, இந்த பிரச்சனை பெரும் பிரலயமாகி அடிதடியை நெருங்கியது. கோவத்தின் உச்சத்தில் இருந்த அபிராமியும், முகெனும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இந்த பிரலயத்தின் நடுவே நீயா நானா விவாத நிகழ்ச்சிபோல் முகெனை குற்றவாளியாக சித்தரித்து, அவரிடம் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவராக கேள்வி கணைகளை எழுப்பச் சொன்னவர் கஸ்தூரி. இந்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்த வனிதாவாக இருந்தாலும், பிரச்சனையை சுமூகமாக முடிக்க முயற்சிப்பதாக, சண்டையை வேற டிராக்கில் வழிநடத்திய கஸ்தூரியிடம் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ள வேண்டும் என முகெனுக்கு அவரது நண்பர்கள் அறிவுரை வழங்கினர்.
அப்போது முகெனுக்கு சாத்தான் வேதம் ஓதுவது போல் கஸ்தூரி ஆறுதல் கூறும் விதமாக பேசிக் கொண்டிருக்க, முகெனின் நண்பர்களான சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர், வனிதா அக்கா சத்தமாக பேசினாலும் நியாயமாக மனதில் பட்டத்தை கொட்டிவிடுவார். அவரை பற்றி நமக்கு தெரியும்.. ஆனால் இந்த வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே வந்த ‘கருப்புக் காக்கா’ (கஸ்தூரி)யை நம்பிடாத மச்சான் என முகெனை உஷார்ப்படுத்தினர்.
பிறகு, வீட்டில் நடந்த சண்டையை மையப்படுத்தி வழக்கம்போல் முகென், கவின், சாண்டி கலாய் பாடலை பாடி பார்வையாளர்களை சற்று உற்சாகப்படுத்தினர். அபிராமி-முகென் ஒருதலை காதல் விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதாவா? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.