BIGG BOSS TAMIL 3: ‘செந்திலுக்கு மாதிரி ஒரு பழம் இல்ல 2 வாழைப்பழம் இருக்கு..’- கவினிடம் கமல் மரண கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முக்கோண காதல் கதை ஹைலைட்டாக அமைந்தது. இந்த வார இறுதி நாளின் முதல் நாளான இன்று கமல்ஹாசன் கலந்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்தார்.

பிக் பாஸ் வீட்டின் எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இறுதியாக சாக்லெட்டை கையிலெடுத்த கமல்ஹாசன், நட்பா? காதலா? கவினா? என மூன்றெழுத்து வித்தை குறித்து விவாதித்தார். சாக்லெட் விவகாரத்தை வைத்து சாக்ஷி-கவின்-லொஸ்லியா இடையிலான முக்கோண காதல் கதையை அலசிய கமல், உதாரணத்திற்காக சூப்பர்ஹிட் கிளாசிக் காமெடியான கவுண்டமணி-செந்தில் இணையின் வாழைப்பழ காமெடியை எடுத்துவிட்டார்.

அவர் பேசுகையில், ‘செந்தில் அண்ணே மாதிரி ஒரு வாழைப்பழம் இல்ல இங்க இரண்டு வாழைப்பழம் இருக்கு நீங்க ஏன் குழப்பிக்கிறீங்க கவின்’ என கலயாத்தார். மேலும், டார்கெட் செய்வதாக கருத வேண்டாம் என்ற கமல், இல்ல சார் புரியுது ரெண்டு பொண்ணுங்களோட நிஜ ஃபீலிங்க்ஸ் கூட விளையாடினது மிகப்பெரிய தவறு என கவின் ஒப்புக் கொண்டார். அதற்கான பாராட்டுக்களையும் பெற்றார்.

அதையடுத்து, சம்மந்தப்பட்ட மைனாக்கள் சாக்ஷி மற்றும் லொஸ்லியாவிடம் கமல்ஹாசன் கேட்டபோது, சாக்ஷி, ‘அவன் சொன்ன வார்த்தைய காப்பாத்தல. அவனால மனதளவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அதுல இருந்து வெளியே வர எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்’ என்றார். இதே லொஸ்லியா மெல்லிய சிரிப்புடன் ‘நான் ஓகே. குட். ஓம்’ என்று கூறி முடித்தார்.

பின்னர் சாக்லெட்டில் ஆரம்பித்த பிரச்சனையை சாக்லெட் கொடுத்தே முடிக்கும் விதமாக கவினுக்கு இரண்டு சாக்லெட் கொடுக்கப்பட்டு அவர் அதை லொஸ்லியா மற்றும் சாக்ஷிக்கு கொடுத்து மன்னிப்புக் கேட்டார். ‘இந்த பிரச்சனைக்குள் இவ்வளவு தான் பேச முடியும்.. மீறினால் தனிமனித சுதந்திரத்தில் பங்கேற்கும் விதமாக இருக்கும்.. நான் அப்பாவாக பேசுகிறேன்.. அதுக்கு மேல் அப்புறம் அவங்க இஷ்டம்’ என கமல்ஹாசன் கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 3 Highlights - Kamal Haasan advises Kavin, do not play with people's feelings

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Tamil 3, Kamal Haasan, Kavin, Losliya, Sakshi will find this news story useful.