விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 31வது நாளில் நடந்த கிராமிய டாஸ்க்கில் நாட்டாமையின் சொம்பை திருடிய லொஸ்லியாவுக்கு சிறிது கடினமான டாஸ்க்கை வழங்கி நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்.
இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு, கீரிப்பட்டி தலைவியாக மதுமிதாவும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரனும் நியமிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து போட்டியாளர்களுக்கும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.
அதில், லொஸ்லியா குறும்பு செய்யும் துறுதுறு பெண் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. லொஸ்லியா இயல்பாகவே பிக் பாஸ் வீட்டில் குறும்புத்தனமாக இருப்பதால், தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்தார். அப்போது கலாட்டா செய்வதற்காக, நாட்டாமையான சேரப்பாவின் சொம்பை களவாடிக் கொண்டு போய் மறைத்துவைத்தார். இதனை கண்டுக் கொண்ட நாட்டாமை, களவானி லொஸ்லியாவை பிடித்து கட்டி வைக்கும்படி தண்டனை கொடுத்தார்.
கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டதற்கு ஹவுஸ்மேட்ஸ் எதிர்ப்பு தெரிவிக்க நாட்டாமை ஸ்ட்ரிக்ட்டாக இருந்தார். மேலும், காணாமல் போன சொம்பை தேடி கண்டுபிடித்து தரும்படி கட்டளையிட்டார். இதனை ஏற்ற முகென் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சொம்பை கண்டுபிடித்தார். சொம்பு கிடைத்தது லொஸ்லியவைன் கட்டை அவிழ்த்துவிட்ட நாட்டாமை, அப்பா மேல சத்தியமா நான் திருடலன்னு சத்தியம் செய்ய சொல்லி வற்புறுத்தினார். லொஸ்லியா மறுக்க, சேரப்பா மீண்டும் மீண்டும் வற்புறுத்த லொஸ்லியாவின் முகம் மாறிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் Fun டாஸ்க் என்று கூறப்பட்ட நிலையில், லொச்லியாவின் உணர்வுகளை சேரப்பா சீண்டி பார்த்தது போல் இருந்ததாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனினும், இந்த டாஸ்க் தற்காலிகமாக தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.