BIGG BOSS TAMIL 3: பிக் பாஸ் ஓட பிளான் இது தானா? HINT கொடுத்த கமல்! - செல்லப்போவது யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், வழக்கத்துக்கு மாறாக, இந்த வாரம் பல சீரியசான பிரச்சனைகள் எழுந்தன. அவை அனைத்தையும் தனக்கே உரிய ஸ்டைலில் கமல்ஹாசன் அலசி ஆராய்ந்து அறிவுரை வழங்கினார்.

கிராமிய டாஸ்க்கில் நடந்த கலவரங்களை ஆராய்வதற்கு முன்பாக கமல்ஹாசன் கொடுத்த எண்ட்ரி, வழக்கத்துக்கு மாறாக இருந்தது. கடந்த 2 சீசன்களில் வந்தது போன்ற ரகசிய அறையை கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மட்டுமே தெரிந்த சுரங்கப்பாதை மூலம் ரகசிய அறைக்குள் சென்றார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வாராவாரம் கலவரத்தை கூட்டுபவர் மீரா. இந்நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷனில் நாமினேட் ஆகியுள்ள மீரா, சேரன் மீது சுமத்திய வீண் பழி காரணமாக மக்களின் வெறுப்பை ஏகபோகத்திற்கு சம்பாதித்து வைத்திருக்கிறார். அதானல், 4வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டை விட்டு மீரா வெளியேற வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில், 34ம் நாள் எபிசோடில், கமல்ஹாசன் ரகசிய அறையை அறிமுகம் செய்து வைத்திருப்பதால், இம்முறை வெளியேற்றப்படுவதாக கூறப்படும் மீரா ரகசிய அறைக்குள் அனுப்பப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் முதல் சீசனில் சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் வைஷ்ணவியும் ரகசிய அறைக்கு அனுப்பபட்டனர். இந்த அறைக்குள் இருப்பவர், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கலாம், கேட்கலாம். தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும், சுய பரிசீலனை செய்துக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நோக்கில் ரகசிய அறை பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வனிதா வெளியேறும் போதே, பிக் பாஸ் இதுபோன்ற ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுப்பார் என்று ஹவுஸ்மேட்ஸே கருதினர். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஹவுஸ்மேட்ஸும், மக்களும் சற்றும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை இம்முறை பிக் பாஸ் செய்யப்போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 3, Day 34, 27 July 2019 episode- Kamal Haasan introduces secret Room, Meera may not evicted, but can sent to secret room

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Tamil 3, Cheran, Kamal Haasan, Meera, Meera Mitun will find this news story useful.