விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 33ம் நாள் எபிசோடில், நடந்து முடிந்த லக்ஸுரி டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபார்மர் என்ற கேட்டகரியில் போட்டியாளர்கள் 3 பேரை தேர்வு செய்ய வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கிராமிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக பிக்பாஸ் வீடு பாம்பு பட்டி கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டது. ஊர் தலைவர்களாக ஒரு கிராமத்திற்கு மதுமிதாவும் மற்றொரு கிராமத்திற்கு சேரனும் அறிவிக்கப்பட்டனர். இந்த டாஸ்க்கில் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்தவர் பட்டியலில் தர்ஷன், முகென் ஆகியோருடன் மீராவின் பெயரும் கூறப்பட, 3 பேரையும் வரும் வாரத்திற்கான கேப்டன் பதிவிக்கு தேர்வு செய்தார் பிக் பாஸ்.
பொதுவாக அமர்ந்து பேசி விவாதிக்கப்பட்ட போது, போட்டியாளர்கள் அனைவரும் மீராவின் பெயரை கூற, அதையே பிக் பாஸும் ஏற்றுக்கொண்டார். ஆனால், விவாதங்கள் முடிந்த பிறகு ஒவ்வொருவரும் எடுத்த முடிவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர்.
டாஸ்க்கில் இருந்து பல முறை வெளியே சென்ற மீரா, ஒவ்வொரு முறையில் அதனை பர்சனலாக எடுத்துக் கொண்டு கோபப்பாட்டார் என்ற குற்றச்சாட்டை, சேரன், மதுமிதா, போன்றவர்கள் முன்வைத்தனர். இதனால், எடுத்த முடிவை மீண்டும் மாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து பிக் பாஸிடம் முறையிட முடிவு செய்தனர். இதில் கடுப்பான மீரா, மதுமிதா தான் நல்லா பண்ணினாங்கனா அவங்களே கேப்டன் பதவிக்கு நிற்கட்டும் என கடுப்பானார்.
ஆக, இந்த பிரச்சனையில் உண்மையில் பெஸ்ட்டாக பெர்ஃபார்ம் செய்தது யாருன்னு பார்வையாளர்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும் என தெரிகிறது.