ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Also Read | ஒரே நாளில் உயிரிழந்த 3 திரைக்கலைஞர்கள்.! சோகத்தில் தமிழ் திரையுலகம்..
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த கிராண்ட் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார். வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமன், அசிம், ஷிவின் மூவரும் மட்டுமே இறுதி போட்டியாளர்களாக இருந்தனர். முதல்முறை ஃபினாலேவில் 3 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்து மரியாதையுடன் அழைத்துவரப்பட்டனர். அதற்கு முன்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் பிக்பாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ந்து அழுதார். பின்னர் ஃபினாலேவில் ஷிவின் எலிமினேட் ஆவதாக அறிவிக்கப்பட்டார்.
இதேபோல் ஷிவினுக்காக கமல்ஹாசன் பரிசால அளித்த கடிதத்தில், "அன்புச் சகோதரி ஷிவின், போட்டி, வெற்றி, புகழ், அங்கீகாரம் இவற்றையெல்லாம் தாண்டி, உங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை நீங்கள் செவ்வனே செய்தீர்கள். கற்களும் முட்களும் நிறைந்த பாதையில் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். சமூகத்துடனான உங்கள் உரையாடல் தொடர வேண்டும். பெரும் செயல்களை நோக்கி, உங்களை நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரன் கமல்ஹாசன்" என குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த ஷிவின் உணர்ச்சிவயப்பட்டபடி புன்னகை செய்திருந்தார்.
இந்நிலையில் உள்ள தன் சொந்த ஊருக்கு காரில் வருகை தந்த ஷிவினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | "இந்த ஃபோட்டோவே சொல்லுது!" - ரசிகரின் Post-க்கு VJ மகேஸ்வரியின் வைரல் கமெண்ட்..! bigg boss 6