நடிகர் சிம்புவை, பிக் பாஸ் 5 பிரபலம் நேரில் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து, தன்னை நடிகராக உயர்த்திக் கொண்ட போதே, தனது நடிப்பாலும், நடனத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், சிம்பு தனது திரைப்பயணத்தில் பல தடுமாற்றங்களைக் கண்டிருந்தார். தன்னுடைய பயணத்தில் என்ன நடந்தாலும், ஆதரவாக கூடவே இருப்பது ரசிகர்கள் மட்டுமே என்றும் பலமுறை அவர் கூறியுள்ளார்.
அமோக வரவேற்பு
அத்தகைய ரசிகர்கள் பலம், நடிகர் சிம்புவுக்கு உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியிருந்த 'மாநாடு' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். வசூல் ரீதியாகவும், மக்களின் பாராட்டிலும், அமோக வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது 'மாநாடு' திரைப்படம். இதனைத் தொடர்ந்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு', கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மக்களை கவர்ந்த டீசர்
இதன் பின்னர், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிகப் பெரிய இடைவெளியில் திரைப்படங்களை சிம்பு நடித்து வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால், உற்சாகத்தில் உள்ளனர், அவரது ரசிகர்கள். அது மட்டுமில்லாமல், வெந்து தணிந்தது காடு டீசர் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில், மிகவும் சாதாரண இளைஞராக சிம்பு நடித்துள்ளது, அனைவரையும் கவர்ந்துள்ளது.
சிம்புவை சந்தித்த பிக் பாஸ் பிரபலம்
அது மட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இது அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வருண், சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து, தன்னுடன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பலரையும் சந்தித்திருந்தார். தொடர்ந்து, தற்போது சிம்புவையும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சந்தித்துள்ளார்.
உங்களை எப்போதும் நேசிக்கிறேன்
இது தொடர்பாக, சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகர் வருண், 'மகிழ்ச்சியான உரையாடல்கள். உங்களை பற்றியும், உங்களின் நுண்ணறிவை பெற்றுக் கொள்வதிலும் மகிழ்ச்சி. எப்போதும் போல உங்களை நேசிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், அடிக்கடி வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது இந்த புகைப்படமும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.