விஜய் டிவியில் பிக்பாஸ் விக்ரமன் நடித்த VTV சீரியல்.. திடீரென வைரலாகும் இன்ட்ரோ வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் விக்ரமன் நடித்த சீரியல் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising


தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

10வது நாளை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விகர்மன், விஜய் டிவிக்காக 2016 ஆம் ஆண்டில் நடித்துள்ள 'விண்ணைத் தாண்டி வருவாயா' எனும் தொடரின் துவக்க வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு  ஒளிபரப்பான இந்த தொடர் சில எபிசோட்களாக ஒளிபரப்பாகியது.

நடிகர் சரத்குமார் இந்த தொடரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் போக, சன் டிவி சேனலில் ஒளிபரப்பான EMI தவணை முறை வாழ்க்கை எனும் தொடரிலும் விக்ரமன் நடித்தது குறிப்படத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Season 6 Tamil Vikraman Old Serial Video Went Viral

People looking for online information on Biggboss, BIGGBOSS season 6, BIGGBOSS TAMIL, EMI, Vijay tv serial, Vikraman will find this news story useful.