BIGG BOSS அரசவையில் நடனமாடிய போட்டியாளர்கள்.. தனா, ஷிவின் & குயின்ஸியின் அசத்தல் டான்ஸ் ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நடிகர் ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.   இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அசல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை   மகேஸ்வரி எலிமினேட் ஆகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இச்சூழலில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடக்கிறது.  பிக்பாஸ் வீடு அரண்மனையாக காட்சியளிக்கிறது.  போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம்,  ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தனலெட்சுமி, ஷிவின், குயின்ஸி ஆகியோர் அசத்தலான நடனம் ஆடும் காட்சிகள் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர்களுடன் இளவரசர் மணிகண்ட ராஜேஷ் சேர்ந்து ஆடுவதும் அமுதவாணன் நடனத்துக்கு ஏற்று பாடுவதும் தற்போது ஹைலைட்டாக அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Season 6 Tamil Contestant Dance Performance day 38

People looking for online information on Aranmanai Task, Biggboss, BIGGBOSS TAMIL will find this news story useful.