மலையாளம் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பியர்ல் மானே (Pearle Maaney), ஸ்ரீநிஸ் அரவிந்த் (Srinish Aravind). இருவரும் நிகழ்ச்சியின் காதலிக்க தொடங்கினர். இருவரும் அந்நிகழ்ச்சிக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது பியர்ல் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து அறிவித்துள்ளார். அதில், இரண்டு வருடங்களுக்கு பிறகு காதலை பகிர்ந்து கொண்டோம் என்றும் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவருக்கு நஸ்ரியா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீநிஸ் தற்போது சத்யா என்ன பெண்குட்டி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
Tags : Bigg boss, Pearle Maaney, Srinish Aravind