VIDEO: உங்க 'ஸ்ட்ராட்டஜி' நல்லா இருந்தது... ரம்யாவை 'பாராட்டிய' பிக்பாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் ஹமாம் சோப் சார்பாக டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. இதற்கு அனிதா, அர்ச்சனா இருவரும் நடுவர்களாக இருந்தனர். ஆரி, ரம்யா, பாலாஜி, ஆஜீத் ஒரு அணியாகவும் சோம், கேப்ரியலா, ஷிவானி மற்றும் ரியோ ஒரு அணியாகவும் பிரிந்தனர். எதிரணியினரின் பந்துகளில் அடி வாங்காமல் வெளியே வரவேண்டும் என்பது தான் போட்டியின் விதி.

இதில் பாலாஜி, ரம்யா, ஆரி மற்றும் ஆஜீத் அணியினர் குறைந்த நேரத்தில் ஸ்கோர் செய்து டாஸ்க்கை வென்றனர். ரம்யாவின் ஸ்ட்ராட்டஜி தான் அவர்கள் அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு புத்திசாலித்தனம் என ரம்யாவை புகழ்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

பிக்பாஸ்க்கும் ரம்யாவின் ஸ்ட்ராட்டஜி பிடித்து போய் விட்டது போல. Unseen வீடியோவில் பாலாஜி, ரம்யா, ஆஜீத், ஆரி ஆகியோருக்கு வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்களை பிக்பாஸ் தெரிவிக்கிறார். தொடர்ந்து உங்க ஸ்ட்ராட்டஜி நல்லா இருந்தது ரம்யா என அவரை பாராட்ட எனக்கு இதுவே போதும் என ரம்யா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Praised Ramay Pandian's game strategy in Task

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.