SUPER MOM : “ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆர்யன்.”.. மகனிடம் பிக்பாஸ் மணிகண்டாவின் மனைவி உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் சூப்பர் மாம் எனும் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் பிரபல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுவரை சொல்லாத உருக்கமான பல சீக்ரெட்களை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!

நடிகை குஷ்பு விருந்தினராக அமைந்த இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஜாரா தொகுத்து வழங்கினர். இதில், பிக்பாஸ் போட்டியாளர் மணிகண்டாவின் மனைவி சோஃபியா தன் மகனிடம் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள உருக்கமான விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் 6வது சீசனில் பங்கேற்றார். இந்த  சீசனில் நல்ல வரவேற்பை பெற்ற மணிகண்டா ராஜேஷ் அண்மையில் வெளியேறினார். இவருடைய மனைவி சோஃபியா சீரியல்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியின் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன் மகன் குறித்து மகன் முன்னிலையில் பேசிய சோஃபியா, “20 வயசுல கல்யாணம் ஆச்சு. 21 வயசுல ஆர்யன் பிறந்தான். அடுத்த 4,5 வருடம் எதுவுமே பண்ல. சீரியல் வாய்ப்புகள் வந்தது.

சில சமயங்கள் ஆர்யன் எதாச்சும் வேணும்னா ஏன் கிட்ட வந்து கேக்காம, அப்பா கிட்டயோ, அத்தை கிட்டயோ வந்து கேக்குறான்னு தோணும். ஒருவேளை என்கிட்ட காசு இல்ல.. நான் வொர்க் பண்லனு அவனுக்கும் தெரிஞ்சிருக்கானு தோணும். அப்றம் டெல்லி போய் மேக்கப் கோர்ஸ் போனேன்.  அவன் பிறந்த நாளில் இருந்து ஒருநாளும் பிரிந்ததில்ல. ஆர்யனும் சொன்னான், நீங்கதான் ஜாலியா போயிட்டீங்கல்லனு சொன்னான். ஆர்யன் நான் ஜாலியா இல்ல ஆர்யன்.. ரொம்ப கஷ்டப்பட்டேன்.. இதுக்கு மேல எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு.. அம்மா வாங்கி தர்றேன்!” என உருக்கமாக அழுதார்.

இதை பார்த்து ஆர்யன் நெகிழ்ந்து போய்விட்டார். இந்த வீடியோ இப்போது மணிகண்டனின் எலிமினேஷனுக்கு பின் வைரலாகி வருகிறது.

Also Read | Super Mom : "ஒன்றரை வயசுல உன்ன விட்டுட்டு போயிட்டேன்ம்மா".. அம்மா சொல்ல சொல்ல அழுத மகள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss manikanda rajesh wife sophia emotional speech

People looking for online information on Bigg boss, Manikanda rajesh sophia super mom, Zee Tamil will find this news story useful.