தமிழ் சினிமாவில் மௌன குரு, கோ படங்களில் தனித்துவமான வேடங்களில் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
இதனையடுத்து அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் சீசன் 3 குறித்து அவரது பதிவுகள் பெரிதும் வைரலானது.
இந்நிலையில் சுர்ஜித் விவகாரம் குறித்து குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்று லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த காஜல் , லாரன்ஸ் மாஸ்டர் உங்கள் நம்பர் எங்களிடம் இல்லை. நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்.
வாழ்க்கை குழந்தை இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. குழந்தையை தத்தெடுக்க உதவ முடியுமா ? குழந்தைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.