BBULTIMATE வின்னரை சந்தித்த ஜுலி …. ஜூலிக்கு ஐ லவ் யூ சொன்ன BB பிரபலம் – வைரல் REUNION PICS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் ஜூலி சென்று சந்தித்து வருகிறார்.

Advertising
>
Advertising

சூப்பரு..ஒட்டுமொத்த பீஸ்ட் படக்குழுவையும் வாழ்த்திய அஜித்தின் அடுத்த பட இயக்குனர்!

பிக்பாஸ் வின்னர் பாலாஜி…

24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 16 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இம்முறை பாலாஜி முருகதாஸ் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். பிக்பாஸ் 4 சீசனில் ரன்னராக வந்த அவர், இந்த முறை ஆரம்பம் முதலே ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். தொடர்ந்து அவரின் நேர்மையான விளையாட்டு, பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இறுதி போட்டிக்கு பாலா, நிரூப் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இதில் பாலா வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை நிரூப்பும், மூன்றாம் இடத்தை ரம்யாவும் பிடித்தனர். பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்ற பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாலாஜியை சந்தித்த ஜூலி…

இந்த நிகழ்ச்சியில் இறுதிவாரம் வரை தாக்குப்பிடித்த ஜூலி, இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேற்றப்பட்டார். கடந்த சீசனில் ஏடாகூடமாக விளையாடி பெயரை கெடுத்துக் கொண்ட ஜூலி, இம்முறை பொறுப்பாக விளையாடி மக்களின் மனங்களை வென்றிருந்தார். அவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூட சிலர் கருதினர். இந்நிலையில், அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றுள்ள தனது சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை ஜூலி நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் ரியல் சேம்பியன் என பாலாஜியையும், பீப்பிள்ஸ் சாம்பியன் என ஜூலியையும் ஒருசேர வாழ்த்தி வருகின்றனர்.

ஜூலியின் reunion….

வின்னர் பாலாஜியை மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களையும் சென்று சந்தித்து வருகிறார் ஜூலி. இது சம்மந்தமான ரி யூனியன் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் ஜூலியோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அபிராமி அதில் “பிக்பாஸ் வீட்டில் என்னுடைய எனர்ஜி பூஸ்டர். லவ் யூ பட்டூஸ்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

“ Are You Ready”…. KVRK படத்தின் செம்ம அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசை நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss Julie reunion with all contestants

People looking for online information on Balaji Murugadoss, BB Ultimate, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Winner, Maria Juliana will find this news story useful.