ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Sunny Leone : “அதை Purpose-ஆ பண்றார்😍!”.. கணவரிடம் பிடிக்காத விஷயம் குறித்து சன்னி லியோன்
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இவர்களுள் தொகுப்பாளினி ஜனனி முக்கிய போட்டியாளராக இருந்தார். இவருக்கென தனி ஆர்மியே உருவானது. ஜனனி குணசீலன் என்கிற இவர் குறித்த அறிமுகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று விஜய் டிவி ஒளிபரப்பியது. அதில் பேசிய ஜனனி, “நான் ஜனனி குணசீலன், இலங்கையின் டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன், அத்துடன் இலங்கையில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். நான் பாரம்பரிய லுக்கில் ஃபோட்டோஷூட்களை செய்ய விரும்புவேன். எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் மிகவும் பிடிக்கும். பிக்பாஸ் எனும் பெரிய தளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன். பிக்பாஸில் நான் யாருக்காகவும், நான் என்னை மாற்றிக்கொள்ளவோ, விட்டுக்கொடுக்கவோ மாட்டேன்,. வெற்றி அடைவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், “நான் எப்படியோ என்னை அப்படியே BB வீட்டில் ஏற்ற வாக்கு அளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்ன்னிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். இதனிடையே புத்தாண்டில் தனது குட்டித் தங்கையுடனான புகைப்படங்களை ஜனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் பலரும் ‘ஜனனி தங்கை முக சாயலும் அப்படி ஜனனி போலவே அசலாக இருக்கிறது’ என கூறி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | Breaking : ‘இதுவல்லவோ அப்டேட்..!’.. விஜய் படத்தில் இணைகிறாரா இயக்குநர் மிஷ்கின் ? | Vijay