பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன் இவர்தான்... செம காண்டில் வனிதா கேங்க்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி  நிமிஷத்துக்கு நிமிஷம் தனது நடவடிக்கைகளை மாற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே கவின் மீது காதல் கொண்டார். பின்னர் முகெனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என வாட்டர் பாட்டீலை வைத்துக்கொண்டு லூட்டி அடித்தார்

முக்கியமாக பிக்பாஸ் வீட்டின் அடாவடி கேங்கான வனிதா கேங்கில் அபிராமியும் உள்ளார். வனிதா கேங்கில் உள்ள ஷெரின், ரேஷ்மா, சாக்ஷி, மீரா ஆகியோர் சொல்வதை அப்படியே கேட்டு வந்தார்.

வழக்கமாக மதுவுடன் சண்டை போட்டு வந்த அவர், நேற்று தான் மீரா வெளியே போக வேண்டும் என வாக்களித்தார். இதனால் வனிதா கேங்க் அபிராமி மீது செம காண்டில் உள்ளது

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக இந்த வாரம் அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தர்ஷனும், சாண்டியும் விட்டுகொடுக்க எளிதாக கேப்டனாகிவிட்டார் அபிராமி.

ஆனால் அபிராமி கேப்டன் ஆனது அவரது கேங்கில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக வனிதாவுக்கு அபிராமி கேப்டன் ஆனது சுத்தமா பிடிக்கவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss House this Week Caption Abirami Venkatachalam

People looking for online information on Bigg Boss 3 tamil, Kamal Haasan, Vijay tv will find this news story useful.