"சன்னி லியோன் எனக்கு யாருனே தெரியாது"- OMG பட விழாவில் தலைவர் G. P. முத்து😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Advertising
>
Advertising

Also Read | "சனியன் எனக்குனே வருது".. மீண்டும் முட்டிய தனலட்சுமி - அசீம் .. பற்றிக்கொண்ட bigg boss வீடு.!

OMG, ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை வகைமையில் உருவாகி உள்ள படம், இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது.

“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து  சன்னி லியோனுடன் மேடையில் தோன்றி பேசினார். "இது என்னுடைய முதல் திரைப்படம். முதலில் இந்த படத்தில் நடிக்க பயந்தேன். நான் சொல்வது போல நடிங்க என இயக்குனர் சொன்னார். படத்தில் சன்னி லியோன் நடிப்பதாக சொன்னார்கள். அப்போது அவங்க எனக்கு யாருனே தெரியாது. அப்புறம் அவங்க புகைப்படம் பாத்து தான் யாருனு தெரிஞ்சுகிட்டேன்." என ஜி.பி. முத்து பேசியுள்ளார்.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | சாமி..சாமி.. பாடலுக்கு GP முத்து போட்ட ஸ்டெப்.. Rashmika-க்கே Tough கொடுப்பாரு போலயே..

"சன்னி லியோன் எனக்கு யாருனே தெரியாது"- OMG பட விழாவில் தலைவர் G. P. முத்து😍 வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BIGG Boss Gp Muthu Talks about Sunny Leone

People looking for online information on Bigg boss gp muthu, GP MUTHU, OMG Movie, OMG Movie Trailer, Sunny Leone will find this news story useful.