2 எலிமினேஷன்?.. இந்த வார BIGG BOSS.. முதல் ஆளாக வெளியேறியது யார்?.. கண்ணீர் விட்ட HOUSEMATES

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டாஸ்க்கில், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. டாஸ்க் முடிவுக்கு வந்த நிலையில், வார இறுதி எபிசோடில் கமல்ஹாசனும் தோன்றி இருந்தார். இந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்தும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை உரையாடி இருந்தார் கமல்ஹாசன்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்தின் முதல் எலிமினேஷனும் தற்போது நடந்துள்ளது. ராம், ஆயிஷா, ADK உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்க, இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் உள்ளதாகவும் தெரிகிறது. இதன் முதல் ஆளாக ராம் பிக்பாஸ் வீட்டை தற்போது வெளியேறி உள்ளார். இத்தனை நாட்கள் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ராம், தற்போது வெளியேறி உள்ளது வீட்டில் உள்ள ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்களை கண் கலங்கவும் வைத்திருந்தது. கடைசி டாஸ்க்கில் கூட, முதல்வன் படத்தில் வரும் நடிகர் ரகுவரன் வேடம் ஏற்றிருந்த ராம், அவரை போல பேசியும் பிக்பாஸ் வீட்டிற்குள் Perform செய்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss first elimination in this week december 10 2022

People looking for online information on Bigg boss 6 tamil, Ram will find this news story useful.