உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதன் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் பங்கேற்றவர் நடிகை சுஜா வருணி.
‘சேட்டை’, ‘பென்சில்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கிடாரி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளா சுஜா வருணி, தனது நண்பரும், நீண்ட நாள் காதலருமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரை கடந்த 2018ம் ஆண்டு நவ.19ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கு கடந்த ஆக.21ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. ‘அத்வைத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள தனது குழந்தையின் புகைப்படத்தை சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், பிறந்து 15 நாட்களில் எடுத்த ஃபோட்டோ ஷூட்டின் புகைப்படங்களை சுஜா வருணி பகிர்ந்துள்ளார். சுஜாவின் ரசிகர்கள் அத்வைத்தின் புகைப்படங்களை தற்போது ட்விட்டரில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.