பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய திருப்பமான வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரேகா ஷர்மிளா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார்.
20 கால்பந்தாட்ட வீரர்கள் நடித்த 'போலாமா ஊர் கோலம்' திரைப்படம்.. சுவாரஸ்ய தகவல்கள்..
பாரதி கண்ணம்மா குழப்பமும் பிரிவும்….
விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்ற இந்த தொடர் இதுவரை 700க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா தம்பதிகளின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், குழந்தை லக்ஷ்மி கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்கின்றனர். கண்ணம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாரதி தவறாக புரிந்துகொண்டதால் இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது.
அப்பாவிடம் தத்துக் குழந்தையாக ஹேமா
ஆனால், இதில் ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் போட்டுடைத்த கண்ணம்மா, “குழந்தை ஹேமா எனது 2வது குழந்தை தான். அதாவது நம் குழந்தை தான்” என சொல்ல, அதிர்ச்சி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதி, சற்றும் அதிராமல், கண்ணம்மா பொய் சொல்லி குழந்தையையும் தன்னையும் பிரிக்க முயல்வதாக கோபத்தில் திட்டிவிடுகிறார். மேலும் உண்மையைப் பேசினார் பாரதியின் அம்மாவும் தன் மாமியாரிடம் பாரதி கோபித்துக் கொள்வான் என கண்ணம்மா மேற்கொண்டு பேசாமல் விட்டுவிட்டார். அதையடுத்த சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி பார்வையாளர்களின் பல்சை எகிற வைத்துள்ளது.
திடீர் திருப்பங்கள்….
இப்படி முழுக்க முழுக்க பாசம் மற்றும் எமோஷன்கள் நிறைந்த காட்சியாக பாரதி கண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கும் போது தான், அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. பாரதியின் தாய் சவுந்தர்யாவுக்கு புதிதாக ஒருவர் மெசேஜ் செய்து தொந்தரவு செய்ய, கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார் சவுந்தர்யா. அது மட்டுமில்லாமல், அந்த நபர் தனியாக சந்திக்கலாமா என கேட்கவே, சவுந்தர்யாவின் கண்கள் இரண்டும் சிவந்து போனது. தான் யார் என்பதை காண்பிக்க வேண்டி, நேரில் வருவதாக உறுதி அளிக்கிறார் சவுந்தர்யா. இதற்காக கணவர் வேணுவிடம் பொய் சொல்லி விட்டு, நேரில் சென்ற பிறகு தான், கல்லூரியில் தங்களுடன் ஒன்றாக படித்த விக்ரம் தான் மெசேஜ் அனுப்பினார் என்ற உண்மை தெரிய வருகிறது. விக்ரம் கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகரான பவன் கல்யாண் நடிக்கிறார்.
வெண்பாவுக்கு வந்த அழைப்பு…
இது ஒருபுறம் இருக்க, பாரதியை அடைய வேண்டி, பல தீய வேளைகளில் ஈடுபட்டு வந்த வெண்பாவுக்கும் ஒரு மர்ம அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய போனில் யாரோ தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பதாக, வெண்பாவின் போனை எடுத்து வந்து கையில் கொடுக்கிறார் வேலை செய்யும் பெண்மணி. அப்போது அழைத்து யார் என பார்த்த வெண்பா, அதிர்ச்சியில் உறைகிறார். "அய்யய்யோ இவங்களா?. இவங்க எதுக்கு இப்போ திடீர்னு திரும்ப திரும்ப கூப்பிடுறாங்க. வாழ்க்கைல யாருகிட்ட இருந்து போன் வரவே கூடாதுன்னு நெனைச்சேனோ, அவங்க எதுக்கு என்ன கூப்பிடனும்?" என மனதில் நினைத்துக் கொள்ளும் வெண்பாவின் முகம், அச்சத்திலும் அதிர்ச்சியிலும் குழம்பி போய் கிடக்கிறது.
வெண்பாவின் அம்மாவாக பிக்பாஸ் ரேகா…
இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரம் யார் என்பது தெரிய வந்துள்ளது. வெண்பாவின் அம்மா ஷர்மிளாதான் அது எனத் தெரியவந்துள்ளது. ஷர்மிளா கதாபாத்திரத்தில் 80 களின் முன்னணி கதாநாயகியும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா நடிக்கிறார். ஷர்மிளா கதாபாத்திரத்தின் அறிமுகமே பாரதியிடம் சென்று கல்யாண பத்திரிக்கை கொடுப்பது போல அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான ப்ரோமோ இப்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுவருகிறது.
“காது வரைக்கும் சிரிச்சேன்… எல்லோருக்கும் Teddy bear hugs”… ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி story!