திருமணத் தேதியை அறிவித்தார்களா இந்த பிக் பாஸ் பிரபலங்கள்? வைரலாகும் வெட்டிங் கார்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்குபெற்ற பராஸ் சப்ரா தன்னுடைய காதலி மஹிரா ஷர்மாவை பிரிந்திருப்பதால் மிகவும் சோகமாக இருப்பதாக சில நாட்கள் முன்பு பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ஜோடியின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி பிக் பாஸ் 13-ன் போது பரஸ் மற்றும் மஹிரா இருவரும் நட்பாக பழகி வந்தாலும், அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் காதல் மலர்ந்ததை மற்ற போட்டியாளர்கள் கவனித்து வந்தனர். இது அந்நிகழ்ச்சியில் சர்ச்சையைக் கிளப்பியது.

பரஸ் ஏற்கனவே அகன்ஷா பூரி என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் பிரிந்துவிட்டனர். அதற்கு மஹிராவுடனான நட்புதான் காரணம் என்று கூறப்பட்டது.

அதன்பின்னர் இருவரும் ம்யூசிக் ஆல்பம் வெளியிட்டனர். இன்ஸ்டாகிராமில் இணைந்து பல புகைப்படங்களை வெளியிட்டனர். கொரோனா பிரச்னையால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த ஜோடிகள் அவரவர் வீட்டில் தனிமைப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் இவர்களது வெட்டிங் கார்ட் இணையத்தில் வெளியானது. முதலில் இந்த இணையருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் மகிழ்ச்சியாகவே இருந்தது என்றனர். அவர்களது ரசிகர் ஒருவர் விளையாட்டாக உருவாக்கிய போலி திருமண அழைப்பிதழ்தான் அது.

சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட பரஸ் long-distance relationship குறித்து பேசியுள்ளார். பார்த்தால்தான் காதலா, பேசினால்தான் அன்பா.. அதெல்லாம் இல்லை. மெளனமே காதல் மொழி என்று ஹிந்தியில் கூறியிருக்கிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss fame Paras Chhabra to wed Mahira Sharma?

People looking for online information on Bigg boss, Coronavirus, Mahira Sharma, Paras, Paras Chhabra will find this news story useful.