உள்ள அப்படி, வெளிய இப்படியா? அப்போ உள்ள நடந்தது எல்லாமே பொய்யா கோபால்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஓவியா மற்றும் ஜூலி கட்டிப்பிடித்துக்கொண்டு பேசும் வீடியோ, அனைவரையும் உற்று பார்க்க வைத்துள்ளது.

Bigg Boss fame Oviya and Julie hugs each other on stage
Advertising
>
Advertising

 

தமிழ் திரையுலகில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் மெரினா, மூடர்கூடம், மதயானைக்கூட்டம், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு மற்றும் யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார் ஓவியா.

Bigg Boss fame Oviya and Julie hugs each other on stage

ஓவியா பற்றி பேசும் போதே நம் நினைவுக்கு வருவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி. தற்போது இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், இவருக்கும் நடிகை ஓவியாவிற்கும் இடையே நடந்த சம்பவம் யாராலும் மறக்கவே முடியாது. தொடக்கத்தில் இருவரும் நல்ல தோழிகளாக இருந்தனர். அதன் பின் இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் ஏற்பட்ட சண்டைகள் மூலம் தமிழ் பிக் பாஸ் சீசன் 1  மிகவும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.


ஜூலி, அடிக்கடி தனது போட்டோஷூட்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். தற்போது ஜூலி, புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கும்  நடனம் ஆடி வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் தன் காதலன் தன்னை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜூலி, தற்போது இந்த வீடியோவை வெளியிட்டதும், அதை பார்த்த நெட்டிசன்கள் வித்தியாசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


சமீபத்தில் நடிகை ஓவியா Celebrity Star Dancer நிகழ்ச்சியில் பங்குபெற வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின்  போட்டியாளராக  இருந்த ஜூலியை சந்தித்துப்பேசி இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சண்டையிட்ட இருவரும் தற்போது கட்டிப்பிடித்து பேசும் வீடியோவை நெட்டிசன்கள் அனைவரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

உள்ள அப்படி, வெளிய இப்படியா? அப்போ உள்ள நடந்தது எல்லாமே பொய்யா கோபால்? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss fame Oviya and Julie hugs each other on stage

People looking for online information on Celebritystardancer, Julie, MariaJuliana, Oviya, Oviyahelen will find this news story useful.