விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் யாஷ்மின் என்பவரை அவர் காதலித்து வருவதாக குறியிருந்தார். இதனையடுத்து இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் யாஷ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்லார். அதில் சைபர் புல்லியிங் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தார்.
நான் ஒரு நடிகை. நான் விமர்சனங்களுக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனக்கு தெரியவும். சில விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும். சில விமர்சனங்கள் கீழ்த்தரமானதாக இருக்கும். ஆனால் கடந்த வருடம் நான் மாநிறமாக இருப்பதாக அதிக விமர்சனங்கள் வந்தது.
அதனால் ஏற்படும் வலி என்பதை கர்ப்பனை கூட செய்து பார்க்க முடியாது. உங்கள் மீதான பார்வை மாறும் என்பதால் இதுகுறித்து உங்களால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது என்று வேதனை தெரிவித்தார்.