திடீரென மருத்துவமனையில் ’பிக்பாஸ்’ ஜூலி… என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் ஜூலி தான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவைப் பகிர அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இதுக்காகவே சில மாதம் வெயிட் பண்ணேன்.. கடைசில”… Birthday-வில் சாய் பல்லவி surprise!

ஜல்லிகட்டு போராட்டமும் பிக்பாஸும்

ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் கவனம் பெற்ற ஜுலி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துகொண்டார்.அந்த சீசனில் ஏடாகூடமாக விளையாடி ஓவியா, காயத்ரி ரகுராம் மற்றும் நமீதா உள்ளிட்ட பலருடனும் அவர் சண்டை போட்டு பெயரை கெடுத்துக் கொண்ட ஜூலி, அதன் பின்னர் திரைப்படங்கள், விளம்பரங்கள் என நடித்து வந்தார்.

பிக்பாஸ் அல்டிமேட்…

அதையடுத்து சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முன்னர் போல இல்லாமல் இம்முறை பொறுப்பாக விளையாடி மக்களின் மனங்களை வென்றிருந்தார். கொடுத்த டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து டீம் மேட்ஸிடம் பாராட்டுகளைப் பெற்றார். அவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூட சிலர் கருதினர். ஆனால் அவர் நிகழ்ச்சியின் இடையில் வெளியேற்றப்பட்டார்.

ஜூலியின் Reunion…

இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவுபெற்றதும் டைட்டில் பட்டம் வென்ற தனது சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை ஜூலி நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதுபோலவே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் சந்தித்து அது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கவனத்தை ஈர்த்தார்.

Operation செய்துகொண்ட ஜூலி…

இதையடுத்து இப்போது ஜூலி சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூலி அங்கிருந்து பகிர்ந்த வீடியோதான் அது. அந்த வீடியோவில் மருத்துவமனை சிகிச்சை பெறுபவர் உடையில் இருக்கும் ஜூலி, தான் லாசிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பார்வை குறைபாட்டை சரிசெய்யும் லேசர் சிகிச்சையை அவர் செய்துகொண்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

திடீரென மருத்துவமனையில் ’பிக்பாஸ்’ ஜூலி… என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss fame Julie done lasik surgery viral video

People looking for online information on Bigg Boss Julie, Bigg Boss Julie Latest updates, Julie done lasik surgery will find this news story useful.