பிரபல நடிகையும் பிக்பாஸ் 3 போட்டியாளருமான வனிதா விஜயகுமார், இயக்குநர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்தார்.
இவர்களது திருமணம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி எளிமையாக நடைபெறவிருக்கிறதாம். இதனையடுத்து வனிதாவின் திருமணத்திற்கு அவரது மகள் ஜோவிதா வாழ்த்துகள் தெரிவித்து கமெண்ட் செய்ய, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளாரர். அதில் வனிதா தனது கையில் பீட்டர் பால் என்றும் பீட்டர் பால் தனது கையில் வனிதா என்றும் பச்சை குத்தியுள்ளனர். இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : Vanitha, Peter Paul