ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விகாஷ் சர்மா. அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இருபாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ பகிர்ந்துள்ள அவர், கடவுள் என்னை படைத்தது குறித்து நான் வெட்கப்படவில்லை. நானும், பிரியங்கும் உறவில் இருந்தோம். பிரியங்கும் நானும் முதலில் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். அதன் பிறகே எங்களுக்குள் இப்படி ஒரு உறவு ஏற்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவரும் ஒன்றரை வருடங்களாக உறவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தனது இருபாலின ஈர்ப்பு குறித்து ஒப்புக்கொண்டுள்ள அவர், டிவி நடிகர் பார்த் சம்தான் என்பவருடன் உறவில் இருந்ததையும் வெளிப்படையாக அந்த வீடியோவில் அறிவித்துள்ளார். தன் குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.