ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | ரச்சிதா, ஜனனி கூட ஜிபி முத்துவின் "Two Two Two".. "டான்ஸ்ன்னு வந்தாலே தலைவன் தனிரகம் தான்
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் என்கிற குரல் மிக முக்கியமானது. பிக்பாஸ் என்கிற இந்த குரல், இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்கும் போட்டியாளர்களை வழிநடத்துகிறது. அவர்களை நெறிப்படுத்துகிறது. அந்த குரலின் கண்டிப்பான அந்த டோன் போட்டியாளர்களுக்கு சிலசமயம் பயத்தையும் பலசமயம் பாதுகாப்பையும் ஏற்படுத்தும். கண்களுக்குப் புலப்படாத அந்த குரல் தமக்கான நியாயத்தை எப்போதும் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை போட்டியாளர்களுக்கு எப்போதுமே இருக்கும். எப்போதும் பேசாமல் இருக்கும் அந்த குரல் அழைத்த குரலுக்கு ஓடி வரும் என்பது போல் போட்டியாளர்களுக்கு ஒன்றென்றால் திடீரென பேசும்.
அதேசமயம் போட்டியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதற்கும் அவர்களை தட்டிக் கொடுப்பதற்கு அந்த குரல் தவறுவதில்லை. அப்படிதான் பல நேரங்களில் பிக்பாஸ் குரல் போட்டியாளர்களிடம் மிகவும் நண்பனாகவே மாறி பேசுவது உண்டு. அந்த வகையில் சமீபத்திய எபிசோடில் மைக்கை சரியாக மாட்டாமல் போட்டியாளர்கள் பேசுவது யாருக்கும் கேட்பதில்லை. ஆம், முன்னதாக ராபர்ட் மற்றும் ஷெரினா இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்து அசீம் கேமரா முன்பு நின்று வெகுநேரமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர் பேசும்போது நிறுத்திவிட்டு, “நீங்கள் பேசுவது கேட்கவில்லை” என்று சொல்லாத பிக்பாஸ், அவர் பேசுவது முழுவதையும் கேட்டுவிட்டு அவர் போகும்போது, “அசீம் ஒரு நிமிடம் நில்லுங்கள்.. நீங்கள் வெகுநேரமாக கேமரா முன்பு நின்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தீர்கள்! கொஞ்சம் மைக்கை மாட்டினால் எங்களுக்கும் கேட்கும்” என்று கலாய்க்கிறார். மேலும் பலரும் இப்படி மைக் மாட்டாமல் இருப்பது குறித்து லிவிங் ரூமில் அனைவர் முன்னிலையிலும் பிக்பாஸ் சில கருத்துக்களை தத்துவ பாணியில் சொல்ல தொடங்கும்பொழுது, எடுத்த எடுப்பிலேயே அவர் சொன்ன விஷயம் யாருக்கும் புரியவில்லை. அப்போது போட்டியாளர்கள், “பிக்பாஸ்.. நீங்கள் மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்” என்று கலாய்த்துவிட்டனர்.
அதன்பிறகுதான், “இல்லையப்பா நீங்கள் தான் நான் சொல்வதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை” என்கிறபடி, அவர்களின் தவறுகளை அவர்களுக்கு பிக்பாஸ் புரியவைக்கிறார். அப்போதுதான் பிக்பாஸ் என்ன சொல்லவருகிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. இப்படி கலகலப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த வீட்டில் நிலையான போட்டியாளராக என்றும் இருக்கும் பிக்பாஸின் குரலுக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உருவம் கொடுத்து நம்மில் ஒருவராகவே பார்க்க தொடங்கியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.!
Also Read | Bigg boss 6 tamil : பேசப் பேச அடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸின் விறுவிறு கதை சொல்லும் Task-ல் நடப்பது என்ன?