ஜனனி & அமுது CODE WORD யூஸ் பண்ணாங்களா..?.. பரபரப்பை கிளப்பிய நாமினேஷன்..! BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, கடந்த வாரம் நடந்து முடிந்த ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் கூட நிறைய கலவரங்கள் வெடித்திருந்தது.

அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது, பழங்குடி அணிக்குள்ளேயே உருவான சண்டை சச்சரவுகள், இரவில் பூ திருடியதாக அசீம் மீது எழுந்த குற்றச்சாட்டு என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. அதே போல, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக, போட்டியாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார்,

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில் தற்போது ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் நாமினேஷன் செய்தது தொடர்பான விஷயம் ஒன்று தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில், அமுதவாணன் வில்லாகவும், ஜனனி அம்பாகவும் செயல்படுவதாக சில போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வார எலிமினேஷன் முன்பாக ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் யாரை நாமினேட் செய்வது என்பது பற்றி Code Word பயன்படுத்தி பேசியதாக ஒரு விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் உணவருந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் யாரை நாமினேட் செய்வது என்பது பற்றி தெரியாமல் இருப்பதாக ஜனனி கூறுகிறார். அப்போது அமுதவாணன், "ஆயிஷா எங்க காணோம்?" என கூறுகிறார். இதனைக் கேட்டதும் ஜனனி சிரிக்க, "ADK சாப்பிட்டாரா?" என தனலட்சுமி கேட்கிறார்.

இதனைத் தொடர்ந்து, "கதிர் பக்கத்துல இருக்கிறான்" என ஜனனி சிரித்து கொண்டே கூறுகிறார். இதன் பின்னர், இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்யும் சமயத்தில் அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் தாங்கள் சாப்பிடும் நேரத்தில் குறிப்பிட்ட ஆயிஷா மற்றும் கதிரவன் ஆகியோரின் பெயர்களை தான் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், Code வார்த்தைகளை பயன்படுத்தி அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேஷன் செய்ய போகும் பெயர்களை தெரிவித்தததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss amudhavanan and janani code word for nomination

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Janani will find this news story useful.