ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read | "இதுகளும் சதி பண்ணுதே".. புது Task-ல் அசிம், விக்ரமன் செஞ்ச விஷயம்.. சிரிக்கவே செஞ்சுட்டாங்க 😂!
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் டாஸ்க் இடையே ஏடிகே மற்றும் மைனா நந்தினி ஆகியோர் மற்ற போட்டியாளர்களின் பர்சனல் Attack குறித்து நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அசிம் மற்றும் ரச்சிதா ஆகியோர் பர்சனல் அட்டாக்கை எப்படி கையாள்கிறார்கள் என்பது பற்றி ADK பேசுகிறார். இதனைத் தொடர்ந்து விக்ரமன் குறித்து பேசும் ஏடிகே, "இங்கே வந்த முதல் இரண்டு, மூணு வாரம் எனக்கு விக்ரமன சுத்தமா புடிக்கல. ஏன்னா, நான் அப்படி ஒரு மனுஷனை பார்த்ததே கிடையாது. தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு சும்மா போயான்னு சொன்னா, போயான்னு சொல்றது தகாத வார்த்தை அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஸ்கூல் வாத்தியார் மாதிரி பண்ணாரு.
ஆனா அதுக்கப்புறம் என்ன தோணுச்சுன்னா, நம்ம இப்ப இருக்கிற Era-ல மாறிட்டு இருக்குற சில வார்த்தைகளை சகஜமா பேசிட்டு இருக்கோம். அவர் அதுக்கு உடன்படல அப்படிங்குறது எனக்கு புரியுது. அதுக்கப்புறம் அவர நான் மதிக்க தொடங்கிட்டேன். அதே சமயத்துல அவர் செய்ற ஒரு சில தப்பும் தெரியுது. ஷிவின் என்ன செஞ்சாலும் சிரிச்சிட்டே இருப்பாரு. ஷிவின எதிர்த்து பேச மாட்டார். சிவன் அவரை பற்றி ஏதாவது பேசினா மட்டும் தான் Trigger ஆகி பேசுவாரே தவிர மத்த யாரை ஷிவின் என்ன சொன்னாலும் தலையிட மாட்டாரு. அவரும் ஒரு சில இடத்தில் Biased-ஆ தான் இருக்காரு" என தெரிவித்தார் ஏடிகே.
Also Read | "பெயிடு ஹாஸ்டல்லயா இருக்கீங்க".. ‘நேருக்கு நேர்’.. அசிம் Vs ரச்சிதா... அனல் பறந்த வாதம்..! Bigg Boss 6 Tamil