பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பீட்டர் பாலின் மீது அவரது முன்னாள் மனைவி தனது கணவர் விவகாரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து இது முறையான பதிவு திருமணம் இல்லை என்று வனிதா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''ரிங் வந்துவிட்டது. ரிஜிஸ்டர் செய்யப்படும் உண்மையான திருமணத்துக்கு ரிசர்வ் செய்யப்பட்டது. எங்கள் இறுதி மூச்சுவரை காதலுடன் தொடர்வோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Vanitha Vijaykumar, Peter Paul