தமிழகத்தில் இன்று (25/05/2020) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் மாற்று மதத்தை சேர்ந்த தங்கள் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கி அன்பை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த மீமிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ''எனக்கு முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் நான் Anti Indian-ஆ? பரவாயில்லை. ரம்ஜான் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை காஜல் பசுபதி, 'கோ', 'மௌன குரு' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.