சென்னை : நெஞ்சுக்கு நீதி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் பிக் பாஸ் ஆரி.
ரெட்டச்சுழி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆரி. அதன்பின் வெளிவந்த நெடுஞ்சாலை, மாயா படத்தின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர், பிக் பாஸ் டைட்டில் வின்னரானார்.
ரசிகருடன் புது கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் செம மாஸ் புகைப்படம் !
தொடங்கிய பணிகள்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "ஆர்ட்டிகள் 15" படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு "நெஞ்சுக்கு நீதி" என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
முன்னணி நடிகர்கள்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பு தான் இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி மற்றும் ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
"சொல்லு.. சொல்லு"... குக் வித் கோமாளி சீசன் 3.. சும்மா கலர்ஃபுல்லா வெளியான தெறி ப்ரோமோ!
வெற்றி இயக்குனர்
இப்படத்தின் மோஷன் போஸ்டர் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன் சில முக்கிய புகைப்படங்கள் படக்குழுவினரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
அருண்ராஜா காமராஜ் பாடகர், பாடலாசிரியராக இருந்து இயக்குனராக மாறியவர். இது இவருக்கு இரண்டாவது படமாகும். கடந்த 2018ஆம் ஆண்டில் வெளிவந்த கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். நெஞ்சுக்கு நீதி படம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, யாமினி சுந்தர், அப்துல் லி, ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.