ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் சமையல் செய்யக்கூடிய அணிகுறித்து மற்றவர்கள் புகார் சொல்லக் கூடிய டாஸ்க் நடந்தது. இதில் பலரும் மகேஸ்வரி மீது புகார் வைக்க அவற்றை கேட்ட பின்பு மகேஸ்வரி விளக்கம் கொடுத்தார். அவருடைய விளக்கத்தில், “உங்களுக்கு சமையல் தொடர்பான கருத்துக்கள், புகார்கள் இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்கிற வழிமுறைகளை முடிவு செய்வதும் தீர்மானிப்பதும் என்பது எங்களுடைய வசதிக்கு ஏற்ப தான் செய்ய முடியும்!” என்று குறிப்பிட்டார்.
இதேபோல் சாந்தியும் தன்னுடைய தரப்பு பதிலை சொல்ல முற்பட்டார். அதற்கு மகேஸ்வரி பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறித்து சாந்தி பேச, மகேஸ்வரி சட்டென தான் பேசுவதை நிறுத்த முடியாமல் தொடர, அந்த நேரத்தில் மீண்டும் மகேஸ்வரியை இடைமறித்த சாந்தி, “நான் பேசுகிறேன்.. இது என்னுடைய கருத்து .. நான் தான் பேச வேண்டும் .. தடுக்காதே” என்று சொல்லிவிட்டு பேச்சை தொடங்கினார். இதனை தொடர்ந்து சாந்தி மீது மகேஸ்வரி புகார் வைத்தார். அதாவது சாந்தி பேசும் போது மகேஸ்வரி இடைமறித்ததாக கருதி, சாந்தி பேசியது சரி இல்லை என்று மகேஸ்வரி கூறினார்.
சாந்தியும் இதற்கு முதலில் கோபமாகி, பின்னர் சாந்தமாக பதில் சொல்லிவிட்டார். இதனிடையே அணியில் உள்ளவர்களுக்கு சாந்தி வருத்தம் தெரிவித்து பேசியது குறித்து பேசிய மகேஸ்வரி, “சாந்தி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். அவரை கொஞ்சம் ஃப்ரீயாக விடலாம்” என்று கூறுகிறார். இன்னொரு பக்கம் சாந்தி, “நான் உழைப்பதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.. கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.. நான் மன்னிப்பு கேட்டதும் அவர்கள் சோர்ந்து போய் விட்டார்களாம்.. அதைத்தான் பெரிதாக பேசுகிறார்கள். என்னவோ” என்று புலம்பிக்கொண்டிருந்தார்.